×

தளபதி கே.விநாயகம் மகளிர் கல்லூரியில் இளையோர் இலக்கிய பயிற்சி


திருத்தணி: தளபதி கே.விநாயகம் மகளிர் கல்லூரியில் இளையோர் இலக்கிய பயிற்சி நடைபெற்றது. சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் இளையோர் இலக்கிய பாசறை பயிற்சி நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் ஔவை அருள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வேதநாயகி வரவேற்றார். இதில், தளபதி கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.பாலாஜி பங்கேற்று பாசறை பயிற்சியை துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, மாணவிகளுக்கு இலக்கியங்கள் குறித்து பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலர் ரா.செல்வராஜ், செம்மொழித் தமிழின் சிறப்பு குறித்து முனைவர் அ.மணிமேகலை சித்தார்தன், கண்களைத் திறந்த உலகம் குறித்து திருப்பூர் கிருஷ்ணன், மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பு குறித்து கவிஞர் நந்தலாலா, அன்னை தமிழ் வளர்த்த அறிஞர்களும் தலைவர்களும் குறித்து முனைவர் ஆதிராமுல்லை, நாடகத்திலும், திரையிலும், நடந்த தமிழ் குறித்து கவிஞர் பிருந்தாசாரதி, புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும் குறித்து, கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துகளை மாணவிகளிடம் எடுத்துக் கூறினார். இதனை தொடர்ந்து, இலக்கியம் குறித்து மாணவிகள் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் சான்றுகள் வழங்கப்பட்டன.

The post தளபதி கே.விநாயகம் மகளிர் கல்லூரியில் இளையோர் இலக்கிய பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Commander K. ,Wyanayakam Women's College ,Commander ,Vinayakam Women's College ,Chennai- ,Tirupati National Highway ,Vinayagam Women's College ,Dinakaraan ,
× RELATED இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது